கரூர் அன்ன காமாட்சியம்மன் கோவிலில் 100-வது ஆண்டு திருவிழா தொடங்கியது

கரூர் அன்ன காமாட்சியம்மன் கோவிலில் 100-வது ஆண்டு திருவிழா நேற்று தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-02-13 18:53 GMT

திருவிழா தொடங்கியது

கரூர் மேற்கு பிரதட்சணம் சாலையில் பிரசித்தி பெற்ற அன்ன காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டு 100-வது ஆண்டு திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று கோவில் உட்புறம் அமைக்கப்பட்டுள்ள அனைத்து சுவாமிகளுக்கும் பூஜை நடைபெற்றது. மாலையில் காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் கரகம் எடுத்து ஐந்து ரோடு, பஜார், ரவுண்டானா உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு வந்தனர்.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு தென்னகப்புகழ் திரைப்பட மெல்லிசை கலைஞர் சென்னை கிங்ஸ்டார் வழங்கிய ஆதி சிவன் சரிகமபதநிசா இன்னிசை கச்சேரி நடைபெற்றது.

இன்று பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி

2-ம் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற உள்ளது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் நடக்கிறது. இரவு சாமியின் உற்சவ அம்மன் திருவீதி உலாவும், தொடர்ந்து கரூர் கணேசன் குழுவினரின் நாதஸ்வர மேளதாளம் மற்றும் திரைப்பட தஞ்சை புகழ் இ.எம்.கனி கரகாட்ட நிகழ்ச்சியும் நடக்கிறது.

3-ம் நாளான நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மாவிளக்கு பூஜை நடக்கிறது. மாலை 6 மணிக்கு கரகம் ஆற்றுக்கு எடுத்து செல்லும் நிகழ்ச்சியும், இரவு தஞ்சை கிராமிய கலைஞர் வழங்கும் எங்க ஊரு பாட்டுக்காரன் கிராமிய தெம்மாங்கு நாட்டுப்புற கலை நிகழ்ச்சியும், மதுரை சுப்ரீம் ஸ்டார் வழங்கும் இன்னிசை பல்சுவை நிகழ்ச்சியும் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு மற்றும் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்