100 நாள் வேலை உறுதி திட்டத்தால் விவசாயம் அழிந்து வருகிறது

100 நாள் வேலை உறுதி திட்டத்தால் விவசாயம் அழிந்து வருகிறது என்று தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி கூறினார்.

Update: 2023-02-28 12:11 GMT

கண்ணமங்கலம்

100 நாள் வேலை உறுதி திட்டத்தால் விவசாயம் அழிந்து வருகிறது என்று தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி கூறினார்.

கண்ணமங்கலத்தில் தமிழக விவசாயிகள் சங்க (உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு) மாநில தலைவர் வேலுசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

பணவீக்கம்

இந்தியாவில் விவசாயிகளின் உற்பத்தியை பெருக்காமல் அன்னிய நாட்டு முதலீட்டை ஈர்ப்பதால் பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியாது.

மத்திய அரசின் தவறான கொள்கையின் காரணமாக இந்திய நாட்டின் பணவீக்கம் கடந்த ஜனவரி மாதம் இறுதி வரை 6 சதவீதம் அதிகமாக உயர்ந்துள்ளது.

மத்திய பா.ஜ.க. அரசு 9 ஆண்டு கால ஆட்சி காலத்தில் இந்தியாவில் வேளாண் வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை. இதனால் வேளாண் வளர்ச்சி இல்லாமல் முடங்கிபோய் உள்ளது.

காங்கிரஸ் ஆட்சி செய்த காலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக 100 நாள் வேலை உறுதியளிப்பு திட்டம் கொண்டு வந்தது. அதனை தொடர்ந்து செயல்படுத்தும் திட்டமாக மத்திய பா.ஜ.க. அரசும் ஊக்கப்படுத்தி வருகிறது.

அழிந்து வருகிறது

100 நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்திற்கு விவசாய கூலி தொழிலாளர்கள் செல்வதால் விவசாயத்திற்கு வேலை ஆட்கள் கிடைக்காததால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாய தொழில் இந்தியா முழுவதும் முடங்கிபோய் உள்ளது. மேலும் விவசாயம் அழிந்து வருகிறது.

100 நாள் வேலை உறுதியளிப்பு திட்டம் இந்தியாவில் தற்போது பயனற்ற திட்டமாக உள்ளது.

இதனால் இந்திய பொருளாதாரம் தேவையற்ற திட்டத்திற்கு செலவிடுவதை நிறுத்தி இந்தியாவில் உள்ள விவசாய கட்டமைப்பு ஊக்குவிக்க மத்திய அரசு செலவிட வேண்டும்.

மத்திய அரசு அத்தியாவசிய பொருள் உத்தரவாத சட்டம் கொண்டு வந்து விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும். வேளாண் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்து உரம், பூச்சி மருந்து, விதை இலவசமாக வழங்க வேண்டும்.

வட்டியில்லாத பயிர்க்கடன்

உள்நாட்டு வேளாண் வளர்ச்சி கட்டமைப்புகளை பெருக்கி தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் விவசாயிகளுக்கு வட்டியில்லாத பயிர்க்கடன் வழங்க வேண்டும்.

மத்திய அரசின் பட்ஜெட்டில் இந்திய விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் திட்டம் எதுவும் இடம் பெறவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்