தத்தனூர் மீனாட்சி ராமசாமி வித்யாலயா பள்ளி ஆண்டு விழா

தத்தனூர் மீனாட்சி ராமசாமி வித்யாலயா பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.

Update: 2022-12-26 19:15 GMT

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே தத்தனூரில் உள்ள மீனாட்சி ராமசாமி வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியின் 8-ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் எம்.ஆர்.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தத்தனூர் கனரா வங்கியின் முதன்மை கிளை மேலாளர் எஸ்.தயாசங்கர் கலந்துகொண்டு முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், பள்ளியில் விடுமுறை இல்லாமல் வருகை புரிந்த மாணவர்களுக்கும் சிறப்பு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அதனைத்தொடர்ந்து பள்ளியின் முதல்வர் கோ.கார்த்திக்ராஜா ஆண்டு அறிக்கையை வாசித்தார். தொடர்ந்து மாணவ-மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் கலை நிகழ்ச்சிகளுக்கு இடையே ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு மாணவர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் மீனாட்சி ராமசாமி மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஆசைத்தம்பி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்