திருப்பூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

Update: 2022-09-25 15:52 GMT


இந்துக்கள் புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை நாளில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். நேற்று மகாளய அமாவாசையையொட்டி திருப்பூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி பார்க் ரோட்டில் உள்ள ராகவேந்திரர் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இந்துக்கள் அதிகாலையில் எழுந்து புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் செய்தனர். பச்சரிசி, பச்சை காய்கறிகள் படைத்து தர்ப்பணம் கொடுத்தனர்.

இதுபோல் அவினாசி, பூண்டி கோவில்களிலும் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். நீர்நிலைகள் இல்லாததால் அதற்காக தண்ணீர் வசதி செய்யப்பட்டு அதில் சடங்குகளை செய்து முன்னோர்களை நினைத்து வழிபட்டனர்.

---------


மேலும் செய்திகள்