தாராபுரம் அடுத்த கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட டி.குமாரபாளையத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் சுமார் 60 மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்களுக்கு போதிய வகுப்பறை கட்டிடம் இல்லாததால் பெரும் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை, குழந்தை நேயபள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.31 லட்சம் மதிப்பீட்டில் புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டது. அதற்கான திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் கட்டிடத்தை திறந்து வைத்தார்.
தாராபுரம் ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி.செந்தில்குமார் விழாவிற்கு தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றிவைத்தார். கூடுதல் வகுப்கட்டிடம் திறக்கப்பட்டு பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இந்நிகழ்சியின் போது வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுருநாதன், பேரூராட்சி செயல் அலுவலர் திருமலைக்குமார், பொறியாளர் காந்திமதி, கொளத்துப்பாளையம் பேரூராட்சி தலைவர் சுதா கருப்புசாமி, பேரூர் தி.மு.க. செயலாளர் துரைசாமி, ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் சசிக்குமார் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.