ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

Update: 2022-06-17 15:23 GMT


தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்த கன மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பலத்த மழை

தாராபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. தினமும் சுமார் 100 டிகிரியை தாண்டி வெயில் மக்களை வாடி வதைத்து வந்தது. இதனால் மக்கள் சாலையில் நடமாட முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் இருந்தது.

இந்த நிலையில் நேற்று காலையில் இருந்து மதியம் வரை வெயில் அதிக அளவில் இருந்தது. பின்னர் மாலை 3 மணிக்கு திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதைத்தொடர்ந்து திடீரென மாலை 3.30 மணி அளவில் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. இதனால் சாலை முழுவதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

பொதுமக்கள் மகிழ்ச்சி

இதே போன்று மூலனூர், குண்டடம் கோவிந்தாபுரம், தளவாய் பட்டினம் உள்ளிட்ட சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. தாராபுரத்தில் பெய்த மழையால் பெரியகடைவீதி, சின்னக்கடை வீதி, அரசமரம் அமராவதி ரவுண்டானா ஆகிய இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. சில இடங்களில் மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் நான்கு சக்கர வாகனத்தில் செல்வோர் பெரும் சிரமம் அடைந்தனர்.

வெளியூர்களிலிருந்து தாராபுரம் வந்த கனரக வாகனங்கள் மஞ்சள் நிற முகப்பு விளக்கை எரிய விட்டவாறு சென்றனர். இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்