தான்தோன்றீஸ்வரர் கோவில் குடமுழுக்கு

மணக்குடி தான்தோன்றீஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-06-01 18:45 GMT

வாய்மேடு:

மணக்குடி தான்தோன்றீஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தான்தோன்றீஸ்வரர் கோவில்

நாகை மாவட்டம் தலைஞாயிறை அடுத்த மணக்குடியில் பழமை வாய்ந்த தான்தோன்றீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் விக்கிரமாதித்த சோழனால் கட்டப்பட்டது என கோவிலில் உள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தது. திருப்பணிகள் நிறைவடைந்து நேற்று காலை 11 மணிக்கு குடமுழுக்கு நடந்தது.

குடமுழுக்கு

முன்னதாக கடந்த 29-ந்் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, தனபூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தியும், 30-ந் தேதி முதல் கால யாக பூஜையும், 31-ந் தேதி 2-ம் கால யாகபூஜை மற்றும் 3-ம் கால யாகசாலை பூஜையும் நடந்தது. இதை தொடர்ந்து நேற்று காலை 4-ம் கால யாகபூஜை நடைபெற்று கடங்கள் புறப்பட்டு கோவிலை வலம் வந்தது. பின்னர் கோவில் கோபுர கலசங்களில் புனி நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் ஆய்வாளர் கமலச்செல்வி, செயல் அலுவலர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் சோமசுந்தரம், நெடுஞ்செழியன், நாராயணசாமி, ரவிக்குமார், ராஜதுரை, அசோகன், சந்திரசேகர், உலகநாதன், பாண்டியன் உள்ளிட்ட கிராம மக்கள் மற்றும் திருப்பணி குழுவினர் செய்து இருந்தனர்

--

Tags:    

மேலும் செய்திகள்