தண்டுபத்துஅனிதாகுமரன் மெட்ரிக் பள்ளியில்விளையாட்டு விழா

தண்டுபத்து அனிதாகுமரன் மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-10-26 18:45 GMT

உடன்குடி:

உடன்குடி அருகே உள்ள தண்டுபத்து அனிதா குமரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. விழாவிற்கு தலைமை வகித்த திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருச்சந்திரன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். இந்நிகழ்சிக்கு திருச்செந்தூர் தாசில்தார் வாமனன், துணை தாசில்தார் சங்கர நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பள்ளி தாளாளரும், முதல்வருமான சோ. மீனா வரவேற்றுப் பேசினார். விழாவில் நிர்வாகஅதிகாரி கண்ணபிரான், துணை முதல்வர் சாந்திஜெயஸ்ரீ, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கிருபைமேரி கிறிஸ்டி பாய், துணைத் தலைவர் அதிமுத்து என்ற காமராஜர் மற்றும் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்