தஞ்சாவூர் வைக்கோல் ஒரு கட்டு ரூ.250-க்கு விற்பனை

தஞ்சாவூர் வைக்கோல் ஒரு கட்டு ரூ.250-க்கு விற்பனை

Update: 2022-09-28 12:59 GMT

தளி

உடுமலை பகுதியில் தஞ்ைச வைக்கோல் விற்பனை செய்யப்பட்டது. ஒரு கட்டு ரூ.250 ஆகும்.

தஞ்சை வைக்கோல்

உடுமலை சுற்றுப்புறப் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.இங்குள்ள விவசாயிகள் திருமூர்த்தி, அமராவதி அணைகள், கிணறு, ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் பருவமழையை ஆதாரமாகக் கொண்டு சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விவசாயத்தின் உபதொழிலாக ஆடு மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். கோடை காலங்களில் சாகுபடிபணி விவசாயிகளை ஏமாற்றினாலும் கால்நடை வளர்ப்பு ஓரளவுக்கு வருமானத்தை அளித்து கை கொடுத்து உதவி வருகிறது.

இதனால் விவசாயிகள் மற்றும் நிலமற்ற விவசாயக்கூலி தொழிலாளர்கள் தொடர்ந்து கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆனால் கடும் வறட்சியும் அபரிதமான மலையும் கால்நடை வளர்ப்புக்கு தடங்கல்களை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கால்நடை வளர்ப்போர் தீவன சேகரிப்பில் ஈடுபட வேண்டியது அவசியமாக உள்ளது.

இது குறித்து கால்நடை வளர்ப்போர் கூறியதாவது:-

கால்நடை வளர்ப்பு என்பது விவசாயிகளுக்கு உப வருமானம் அளிக்கும் தொழிலாகவும் நிலமற்ற கூலித் தொழிலாளர்களுக்கு முழு நேர தொழிலாகவும் உள்ளது.கால்நடை வளர்ப்பின் மூலம் இயற்கை உரங்கள் தயாரிப்பு மற்றும் பால் உற்பத்தி போன்றவற்றால் ஓரளவுக்கு வருமானத்தை பெற்று பிழைப்பு நடத்தி வருகின்றோம். கோடை காலங்களில் தீவனத் தட்டுப்பாடு ஏற்படுவது போன்று அடை மழை காலங்களில் கையிருப்பு தீவனமே கால்நடைகளுக்கு உதவி புரிந்து வருகிறது.அதில் மக்காச்சோளம் மற்றும் சோளத்தட்டு, நிலக்கடலை கொடி, வைக்கோல் உள்ளிட்டவை அடங்கும்.இதன் காரணமாகவே முன்னெச்சரிக்கையாக நடவடிக்கையாக தீவனங்களை வாங்கி இருப்பு வைத்து வருகின்றோம்.

ஒரு கட்டு ரூ.240

அந்த வகையில் தஞ்சாவூர் பகுதியில் இருந்து உடுமலை பகுதிக்கு வைக்கோல் கட்டுகள் இறக்குமதியாகி வருகின்றன.அதை கட்டு ஒன்றுக்கு ரூ. 240 கொடுத்து வாங்கிச் சென்று பக்குவப்படுத்தி வருகின்றோம். வருகின்ற வடகிழக்கு பருவமழை காலத்தை எதிர்கொள்வதற்கு தீவனத்தை இருப்பு வைப்பது பெரிதும் உதவிகரமாக இருக்கும்.இதனால் பால் உற்பத்தியும் தடைபடாது சீரான வருமானம் கிடைப்பதற்கும் ஏதுவாக இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்