தம்பிதுரை பூங்கா, மணிக்கூண்டு விரைவில் சீரமைக்க நடவடிக்கை
நாகை தம்பிதுரை பூங்கா, மணிக்கூண்டு விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முகமது ஷா நவாஸ் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
வெளிப்பாளையம்:
நாகை நகரின் அடையாளமாக அமைந்துள்ள மணிக்கூண்டு மற்றும் தம்பிதுரை பூங்கா மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது. அதை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பது மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. இது தொடர்பாக முகமது ஷா நவாஸ் எம்.எல்.ஏ. அங்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, விரைவில் மணிக்கூண்டு மற்றும் பூங்கா சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என தெரிவித்தார். ஆய்வின் போது, நாகை நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி மற்றும் நகராட்சி செயற்பொறியாளர் உள்பட பலர் உடனிருந்தனர்.