அம்மன் கோவிலில் தாலி திருட்டு

உளுந்தூர்பேட்டை அருகே அம்மன் கோவிலில் தாலி திருட்டு மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

Update: 2022-11-05 18:45 GMT

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாண்டூர் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பூசாரி மணிகண்டன் நேற்று காலை பூஜை செய்ய வந்தபோது கோவில் கதவின் முன்பக்க பூட்டு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் கிடந்த 1 ½ பவுன் தாலியை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.50 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

இது குறித்து மணிகண்டன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் உளுந்தூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தலிங்கம் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து திருட்டு நடந்த கோவிலை பார்வையிட்டனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அம்மன் கழுத்தில் கிடந்த தாலியை திருடிச்சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்