தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்தில் 206 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம்

தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்தில் 206 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது.

Update: 2022-07-12 17:26 GMT

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சிகள்) செந்தில்குமார் வரவேற்று பேசினார். மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் அன்பரசி திட்டத்தை விளக்கி பேசினார். ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு தங்க நாணயங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 206 பயனாளிகளுக்கு ரூ.79 லட்சத்து 61 ஆயிரத்து 488 மதிப்பில் தலா 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டது. மேலும் பயனாளிகளின் வங்கி கணக்கில் தலா ரூ.50 ஆயிரம் செலுத்தப்பட்டு அதற்கான ஆணை வழங்கப்பட்டது. முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் நன்றி தெரிவித்து பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்