மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையருக்கு கூடுதலாக தக்கார் பொறுப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையருக்கு கூடுதலாக தக்கார் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Update: 2023-06-12 20:33 GMT


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையருக்கு கூடுதலாக தக்கார் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

புதிய இணை ஆணையர் பொறுப்பேற்பு

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்ட மக்களும், வெளி நாட்டு மக்களும் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இந்தநிலையில், ஏற்கனவே, இணை ஆணையர் நிலை பதவியிடத்தில் இருந்த மீனாட்சி அம்மன் கோவில், போதிய அலுவலர்கள் இல்லாததால் துணை ஆணையர் நிலை பதவியிடத்துக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் இறக்கப்பட்டன. இதனால், கோவில் நிர்வாகப் பணிகளை துணை ஆணையர் நிலையிலான அலுவலர் மேற்கொண்டு வந்தார். இந்தநிலையில், கடந்த மார்ச் மாதம் மீனாட்சி அம்மன் கோவில் மீண்டும் இணை ஆணையர் நிலைக்கு உயர்த்தப்பட்டன.

இதற்கிடையே, எஸ்.கிருஷ்ணன் என்பவரை மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையராக இந்து சமய அறநிலையத் துறை நியமித்ததுள்ளது. இதையடுத்து, அவர் மீனாட்சி அம்மன் கோவிலில் இணை ஆணையராக நேற்று அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கோவில் அலுவல் சார் தக்கார் நியமனம்

இந்தநிலையில் மீனாட்சி அம்மன் கோவில் தக்காராக இருந்து வந்த கருமுத்து கண்ணன் உடல்நலக்குறைவால் கடந்த 23-ந்தேதி காலமானார். இதனால் தக்கார், அறங்காவலர் குழு இல்லாமல் கோவிலின் வளர்ச்சிக்கு எந்தவித தீர்மானங்கள், வங்கிப் பண பரிவர்த்தனைகள், கருவூல நகைகள் ஆகியவற்றை பயன்படுத்த முடியாத நிலை இருந்து வந்தது. மேலும், அவசர அவசியத்திற்கு நகைகள் எடுக்க இயலாமலும், உண்டியல் பூட்டு சாவிகள் ஒரு செட் தக்காரிடம் உள்ளதால், உண்டியல் திறக்க இயலாத சூழ்நிலை இருந்து வந்தது.

எனவே கோவிலின் அன்றாடப் பணிகள் எவ்வித இடையூறுமின்றி நடைபெற நிர்வாக நலன் கருதி புதிய பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர் குழு நியமனம் செய்யும் வரை அரசு விதிகளுக்கு உட்பட்டு, கோவில் இணை ஆணையர் மீனாட்சி அம்மன் கோவிலின் அலுவல்சார் தக்கராக செயல்படுவார் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்