முருகன் கோவிலில் தைப்பூச தெப்ப உற்சவம்

முருகன் கோவிலில் தைப்பூச தெப்ப உற்சவம் நடைபெற்றது.

Update: 2023-02-05 17:55 GMT

விராலிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தைப்பூச திருவிழா நடைபெற்று வருகிறது. இதையடுத்து இன்று விராலிமலை தெற்கு தெருவில் உள்ள தெப்பக் குளக்கரையில் முருகப்பெருமான் சமேத வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளினார். பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து முருகப்பெருமான், வள்ளி-தெய்வானையுடன் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மயில் வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி 4 ரத வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் விராலிமலை சுற்று வட்டாரத்தில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்று சென்றனர். கோவிலில் எப்போது இல்லாத அளவிற்கு 2 மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்