தோரணமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா
தோரணமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா நடந்தது.
கடையம்:
கடையம் அருகே தோரணமலை முருகன் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு காலையில் கணபதி ஹோமம், ஸ்கந்த ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் மலைமேல் உள்ள சுனையில் இருந்து புனித நீர் எடுத்து முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து முருகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும் சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து முருகப்பெருமான், வள்ளி- தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.