தச்சமொழி கோவில் கொடை விழா:முளைப்பாரி பரத்தும் வைபவம்
தச்சமொழி கோவில் கொடை விழாவை முன்னிட்டு முளைப்பாரி பரத்தும் வைபவம் நடந்தது.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் தச்சமொழி தேவிஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாத கொடை விழா வருகிற 6-ந் தேதி தொடங்கி 10-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு கொடை விழா முளைப்பாரி பரத்தும் வைபவம் நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீமுத்துமாரி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் வழங்கிய ஓடுகளில் முளைப்பாரி பரத்தப்பட்டது. முளைப்பாரி பரத்தியதும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.