ரெயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்த டெக்ஸ்டைல் தொழிலாளி

வெங்கமேடு அருகே ரெயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்த டெக்ஸ்டைல் தொழிலாளியின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-08-12 19:05 GMT

தொழிலாளி பிணம்

கரூர் மாவட்டம், வெங்கமேடு அருகே குளத்துப்பாளையம் ெரயில்வே தண்டவாளத்தில் நேற்று காலை 7:30 மணியளவில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் பிணமாக கிடந்தார். இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் கரூர் ெரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.விசாரணையில், இறந்து கிடந்தவர் வெங்கமேடு வி.வி.ஜி.நகரை சேர்ந்த சவுந்தர ராஜன் (வயது 46) என்பதும், அவர் ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும், தற்போது சரியாக வேலை கிடைக்காமல் இருந்து வந்ததும் தெரிய வந்தது.

போலீசார் விசாரணை

இதையடுத்து போலீசார் சவுந்தரராஜன் உடலை பிரேத பரிசோதனைக்காக கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிந்து, சவுந்தரராஜன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது ரெயில்வே தண்டவாளத்தை கடக்கும்போது ரெயில் மோதி இறந்தாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்