ஜவுளி கடை ஊழியர் தற்கொலை

வீரபாண்டி அருகே ஜவுளி கடை ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-12-12 19:00 GMT

வீரபாண்டி அருகே உள்ள தாடிச்சேரி மேற்கு தெருவை சேர்ந்தவர் பொம்மையசாமி (வயது 56). தனியார் ஜவுளி கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்