சாலை விபத்தில் ஜவுளி நிறுவன மேற்பார்வையாளர் பலி

தென்னிலை அருகே நடந்த சாலை விபத்தில் ஜவுளி நிறுவன மேற்பார்வையாளர் பலியானார். வாலிபர் படுகாயம் அடைந்தார்.

Update: 2023-02-08 18:30 GMT

மேற்பார்வையாளர்

ஈரோடு மாவட்டம், கொடுமுடி தழுவம்பாளையத்தை சேர்ந்தவர் பிரசாத் (வயது 24). இவர் திருப்பூர் பகுதியில் ஒரு தனியார் ஜவுளி நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் கொடுமுடி-முத்தூர் சாலையில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது திருப்பூர் முத்தூர் ஆலம்பாளையம் சேர்ந்த கார்த்திகேயன் (35) என்பவரும், பிரசாத்துடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்தார். நொய்யல் ஆற்றுப் பாலத்தின் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.

பலி

இதில் சிறிது நேரத்தில் ரத்த வெள்ளத்தில் பிரசாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தென்னிலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த கார்த்திகேயனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் பிரசாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து குறித்து தென்னிலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்