டெக்ஸ்டைல் நிறுவன உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை

கரூரில் டெக்ஸ்டைல் நிறுவன உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2023-05-15 19:21 GMT

தொழிலதிபர்

கரூர் ஆண்டாங்கோவில் புதூரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 47). தொழிலதிபரான இவர், கரூரில் சொந்தமாக டெக்ஸ்டைல் நிறுவனம் நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக பன்னீர்செல்வம் வயிற்று வலி மற்றும் முதுகு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதனால் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் உடல் நிலை சரியாகவில்லைஎன கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட பன்னீர்செல்வம் சம்பவத்தன்று தனது வீட்டில் தூக்கில் தொங்கினார்.

தற்கொலை

இதைக்கண்ட உறவினர்கள் பன்னீர்செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பன்னீர்செல்வம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த தற்கொலை குறித்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகநாத வடிவேல் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்