டெக்ஸ்டைல் நிறுவன ஊழியர் மர்ம சாவு

லாலாபேட்டை அருகே டெக்ஸ்டைல் நிறுவன ஊழியர் மர்மமான முறையில் இறந்தார்.

Update: 2023-03-09 18:55 GMT

மர்மசாவு

கரூர் மாவட்டம், கீரனூர் அருகே உள்ள குண்ணுடையான் கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் ராஜீவ்காந்தி (வயது 39). இவர் கரூரில் உள்ள ஒரு தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் ராஜீவ்காந்தி நேற்று முன்தினம் வழக்கம்போல் கரூருக்கு வேலைக்கு சென்று விட்டு வீீட்டிற்கு வந்தார்.

பின்னர் அன்று இரவு வீட்டில் இருந்தவர்களிடம் லாலாபேட்டை அருகே உள்ள பஞ்சப்பட்டி பகுதிக்கு சென்று விட்டு வருவதாக கூறி விட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் வெகுநேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு வரவில்லையாம். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பல்வேறு இடங்களில் ராஜீவ்காந்தியை தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்தநிலையில் நேற்று காலை ராஜீவ்காந்தி பஞ்சப்பட்டியில் உள்ள ஒரு டாஸ்மாக்கடை அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

வழக்குப்பதிவு

இதுகுறித்து தகவல் அறிந்த லாலாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜீவ்காந்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ராஜீவ்காந்தியின் தந்தை மாரியப்பன் லாலாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, ராஜீவ்காந்தி மர்மசாவு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்