மாநகராட்சி பள்ளியில் மாணவிகளுக்கு பாடப்புத்தகம்

நெல்லை டவுன் மாநகராட்சி பள்ளியில் மாணவிகளுக்கு பாடப்புத்தகம் வழங்கப்பட்டது.

Update: 2023-06-12 19:37 GMT

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான வகுப்புகள் தொடங்கப்பட்டது. இதையொட்டி நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று காலை மேயர் பி.எம்.சரவணன் மாணவிகளுக்கு பூங்கொத்து மற்றும் பேனா வழங்கி வரவேற்று வாழ்த்தினார். மேலும் மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் புதிய பாடப்புத்தகங்களை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து 18-வது வார்டு காமராஜர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கடந்த கல்வி ஆண்டில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பாராட்டி கேடயம் வழங்கினார். மேலும் பள்ளியில் ஆய்வு செய்து, சேதம் அடைந்த பகுதிகளை சீரமைக்க உத்தரவிட்டார். அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியையும் ஆய்வு செய்து, தொட்டி குழாயில் உள்ள நீர் கசிவை சரி செய்யவும், அப்துல் லத்தீப் தெரு பாதாள சாக்கடை பணிகளை விரைவாக முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் பேட்டை ராணி அண்ணா மேல்நிலைப்பள்ளியிலும் மாணவிகளுக்கு பூங்கொத்து மற்றும் பேனாக்களை மேயர் வழங்கினார். இந்த நிகழ்ச்சிகளில் கவுன்சிலர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் உடனிருந்தனர்.

இதேபோல் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ கலந்து கொண்டு மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் நெல்லை மண்டல தலைவர் மகேஸ்வரி, கவுன்சிலர் அனார்கலி சுபானி மற்றும் பகுதி துணைச் செயலாளர் சுபானி கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்