மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் 76 இடங்களில் பரிசோதனை - ஐதராபாத் ஆய்வகத்திற்கு செல்லும் ``மதுரை மண்''

மதுரையில் மெட்ரோ ரெயில் அமைய கூடிய வழித்தடத்தில் 76 இடங்களில் மண் எடுக்கப்பட்டு அதை பரிசோதனைக்காக ஐதராபாத்திற்கு அனுப்பப்படுகிறது.

Update: 2023-04-15 20:27 GMT

திருப்பரங்குன்றம்,


மதுரையில் மெட்ரோ ரெயில் அமைய கூடிய வழித்தடத்தில் 76 இடங்களில் மண் எடுக்கப்பட்டு அதை பரிசோதனைக்காக ஐதராபாத்திற்கு அனுப்பப்படுகிறது.

ரூ.8,500 கோடியில் மெட்ரோ ரெயில்

திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரையிலுமாக சுமார் 31 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவை அமைய உள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.8,500 கோடி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை 10 இடங்களில் ரெயில் நிறுத்தம் அமைய உள்ளது. வருகின்ற 2024-ல் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு 2027-ல் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல் கட்டமாக வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளதா? என்று சர்வே செய்யப்பட்டு வருகிறது

மதுரை மண் பரிசோதனை

2-ம் கட்டமாக அரை கிலோமீட்டர் தூரம் இடைவெளிக்கு ஒரு இடம் வீதம் 76 இடங்களில் 30 அடி ஆழத்திற்கு எந்திரம் மூலமாக தரையின் திடம் அறிய மண் எடுக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. முதற்கட்டமாக 5 எந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சுமார் 20-க்கும் மேற்பட்ட எந்திரங்கள் பயன்படுத்தி 3 வாரத்திற்குள் பரிசோதனைக்காக மண் எடுக்க திட்டமிட்டு பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த பணியில் 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு இடத்திலும் மண்ணின் தன்மை மாறுப்பட்டுள்ளது. அதை தனித்தனியாக பாக்கெட்டுகளில் சேகரித்து வருகின்றனர்.

உரிய இடங்களில் மண் எடுக்கப்பட்டதும் உடனுக்கு உடன் ஐத்ராபாத்தில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்