தமிழ்நாடு முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. திருப்பூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொது தேர்வு 113 தேர்வு மையங்களில் நடைபெற்று வருகிறது. இதில் 354 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 30 ஆயிரத்து 672 மாணவர்கள் மற்றும் 1,521 தனித் தேர்வர்கள் என 32 ஆயிரத்து 193 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.இந்த நிலையில் காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் தேர்வு மையத்தில் திருப்பூர் மாவட்ட சிறப்பு பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாடநூல் கழக இயக்குனர் ஆர்.கஜலட்சுமி நேற்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.திருவளர்ச்செல்வி உள்ளிட்டோர் உடனிருந்தனர்