திருக்கோவிலூர் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து

திருக்கோவிலூர் அருகே வடக்கு நெமிலி கிராமத்தில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.;

Update:2023-03-04 17:45 IST

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே வடக்கு நெமிலி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான பழைய பிளாஸ்டிக் பொருட்கள் வைக்கும் குடோன் ஒன்று உள்ளது.

இந்த பிளாஸ்டிக் குடோனில் இன்று மதியம் சுமார் 2 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீ கொழுந்து விட்டு எறிந்ததால் அக்கிராமம் முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. இந்த நிலையில் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அருகில் உள்ள திருக்கோவிலூர் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பெயரில் இரண்டு தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் பிளாஸ்டிக் குடோனில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 10 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமானது இந்த தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Full View

Tags:    

மேலும் செய்திகள்