செங்கம் அருகே அரசுப் பஸ்சும் காரும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து - 5 பேர் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அரசுப் பஸ்சும் காரும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.;

Update:2023-10-23 23:34 IST

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அந்தனூர் பகுதியில் திருவண்ணாமலை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பெங்களூரில் இருந்து வந்த அரசு பஸ்சும் திருவண்ணாமலையிலிருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஆறு பேர் சிகிச்சைக்காக செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் செங்கம் தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் இணைந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Full View

Tags:    

மேலும் செய்திகள்