சாய்ந்து கிடக்கும் தைல மரம்

சாய்ந்து கிடக்கும் தைல மரம்

Update: 2023-04-11 10:39 GMT

அருள்புரம்

தைல மரம் என்பது மிர்டேசியே என்ற குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும். ஆஸ்திரேலியா, டாஸ்மானியா ஆகிய நாடுகளைத் தாயகமாகக் கொண்ட இத்தாவரம் ஆங்கிலேயர்களால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் மரக்கூழ் தொழிற்சாலைத்தேவைகளுக்காக பலரால் பெரிதும் விரும்பிப் பயிரிடப்பட்டது. தைலமரங்களில் 700-க்கு மேற்பட்ட இனங்கள் உள்ளன. இப்படிப்பட்ட தைல மரம் ஒன்று திருப்பூர் அருகே கரைப்புதூர் ஊராட்சி அல்லாளபுரம் குட்டை அருகே சாய்ந்து 2 மாதங்களாக அகற்றப்படாமல் உள்ளது. இது குறித்து கரைப்புதூர் கிராம நிர்வாக அலுவலர் கவுரியிடம் கேட்டபோது இந்த மரம் குறித்து சப்-கலெக்டருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்த உடன் மரம் ஏலம் விடப்படும் என்று கூறினார்.

---

Tags:    

மேலும் செய்திகள்