பெண் போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்

நாகர்கோவிலில் விடுமுறை தொடர்பாக பெண் சப்-இன்ஸ்பெக்டருடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாக பெண் போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2023-02-24 18:45 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் விடுமுறை தொடர்பாக பெண் சப்-இன்ஸ்பெக்டருடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாக பெண் போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

சப்-இன்ஸ்பெக்டருடன் மோதல்

நாகர்கோவில் மறவன்குடியிருப்பு பகுதியில் ஆயுதப்படை முகாம் உள்ளது. இங்கு பெண் போலீஸ் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டராக ஒருவர் பணியாற்றி வருகிறார். அவர் பணியில் இருந்த போது அங்கு பணியாற்றும் பெண் போலீஸ் ஏட்டு சொர்ணவேணி (வயது 39) என்பவர் குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறி விடுமுறை கேட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு திடீரென கைகலப்பாக மாறியது. இதில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இந்த தாக்குதலில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது.

ஏட்டு பணியிடை நீக்கம்

பின்னர் அவர்கள் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த சம்பவம் ஆயுதப்படை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த மோதல் தொடர்பாக பயிற்சி பெண் சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு சொர்ணவேணி ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்தநிலையில் போலீஸ் ஏட்டு சொர்ணவேணியை பணியிடை நீக்கம் செய்து சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்