வந்தே பாரத் ரெயிலில் இருந்து விழுந்து பயணி சாவு:2 ஊழியர்கள் பணியிடை நீக்கம்

வந்தே பாரத் ரெயிலில் இருந்து விழுந்து பயணி இறந்தது தொடர்பாக சேலத்தில் 2 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Update: 2023-09-29 20:31 GMT

சேலம்

சென்னை கீழ்கட்டளை திருவள்ளுவர் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற போக்குவரத்து ஆய்வாளர் பவுலேஸ் (வயது 70). இவர், கடந்த 26-ந் தேதி வந்தே பாரத் ரெயில் சேலம் ரெயில் நிலையத்தில் நின்றது. அப்போது அவசர கதவு அருகே நின்று இருந்த பவுலேஸ் கதவு திறந்து கீழே விழுந்தார். இதில் அவர் படுகாயம் அடைந்து அங்கேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ரெயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்பேரில் அதிகாரிகள் வந்தே பாரத் ரெயிலின் சி3 பெட்டியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். ரெயில் 4-வது நடைமேடையில் வந்து நின்ற போது, 5-வது பிளாட்பாரத்தில் இருந்து வந்த 2 ஊழியர்கள் அவசர கதவை திறந்து வைத்ததாக தெரிகிறது. அவர்கள் பாயிண்ட் மேன்களாக பணிபுரிந்து வரும் தாமரைசெல்வன், மீனா ஆகியோர் என்பது தெரிய வந்தது. இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதற்கான உததரவை கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா பிறப்பித்துள்ளதாக தெரிகிறது. மேலும் துறைரீதியான விசாரணையும் நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்