தென்திருப்பேரைமகர நெடுங்குழைக்காதர் கோவில் பங்குனி தேரோட்டம்

தென்திருப்பேரைமகர நெடுங்குழைக்காதர் கோவில் பங்குனி தேரோட்டம் நடைபெற்றது.;

Update: 2023-04-13 18:45 GMT

தென்திருப்பேரை:

தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவில் பங்குனி தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

பங்குனி திருவிழா

தென்திருப்பேரை மகர நெடுகுழைக்காத கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்பாள்களுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்து வருகிறது. கடந்த 9-ந்தேதி கருட சேவை நடந்தது.

மேலும் இக்கோவிலில் தினமும் காலை, மாலையில் நேரங்களிலும் சுவாமி வீதி புறப்பாடு நடைபெற்று வந்தது.

தேரோட்டம்

நேற்று தேரோட்டத்தை முன்னிட்டு காலை 7.30 மணிக்கு பெருமாள் நிகரில் முகில்வண்ணன் திருத்தேரில் எழுந்தருளினார். அவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காலை 9 மணிக்கு மாவட்ட அறங்காவல் குழு தலைவர் பார்த்திபன் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து ெசன்றனர்.

கீழரத வீதியில் இருந்து இழுக்கப்பட்ட தேர் மேலரத வீதி வந்தபோது, வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் தேர் இழுப்பதை பக்தர்கள் நிறுத்தினர். பின்னர் மாலை 5 மணிக்கு மீண்டும் தேர் இழுக்கப்பட்டது. இரவு 7.30 மணிக்கு தேர் நிலைக்கு வந்து சேர்ந்தது.

வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டிருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்