இருதரப்பினர் போராட்டம் எதிரொலி:திங்கள்சந்தையில் போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு

இருதரப்பினர் போராட்டம் எதிரொலியால் திங்கள்சந்தையில் போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-06-08 18:47 GMT

திங்கள்சந்தை, 

இருதரப்பினர் போராட்டம் எதிரொலியால் திங்கள்சந்தையில் போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ் குவிப்பு

தேங்காப்பட்டணம் பனங்கால்முக்கு பகுதியில் கடந்த மாதம் ஏற்பட்ட தகராறு சம்பவம் தொடர்பாக இருதரப்பினரிடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இதை தொடர்ந்து இரணியல் அருகே மேக்கோட்டில் பா.ஜ.க. பிரமுகர், அவரது மனைவியுடன் தாக்கப்பட்டார். இந்த வழக்கு சம்பந்தமாக இரணியல் போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் தேங்காப்பட்டணம் இளைஞர்களை தாக்கியவர்கள் மீதும், திங்கள்சந்தை ஆர்ப்பாட்டத்தில் சிறுபான்மையினரை மிரட்டி பேசியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஒரு தரப்பினரும், மேக்கோடு சம்பவத்தை தேசிய புலனாய்வு பிரிவு விசாரணைக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி மற்றொரு தரப்பினரும் நேற்று போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.

இருதரப்பினர் ஒரே நாளில் திங்கள்சந்தையில் போரட்டத்தை அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். மேலும் போலீசார் இருதரப்பினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து நேற்று போராட்டத்தை கைவிடுவதாக இருதரப்பினரும் அறிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்