தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம்
தென்காசி அருகே இலத்தூரில் உள்ள பள்ளியில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நடந்தது.
தென்காசி அருகே உள்ள இலத்தூர் வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் சுந்தர மகாலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் கனிமொழி, முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லத்துரை, தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர்கள் அழகு சுந்தரம், சீனித்துரை, ரவிசங்கர், திவான் ஒலி, செங்கோட்டை நகரச் செயலாளர் வெங்கடேசன் மற்றும் பலர் பேசினார்கள். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் பேசும்போது கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு அடுத்த மாதம் தென்காசி மாவட்டத்திற்கு முதல் முறையாக வருகை தந்து இலத்தூர் வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் நடைபெறும் விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மேலும் புதிய திட்டங்களை தொடங்கி வைக்கவும், முடிவுற்ற பணிகளை பயன்பாட்டிற்கு அளிக்கவும் உள்ளார். பொதிகை விரைவு ெரயில் மூலம் தென்காசிக்கு வரும் முதல்-அமைச்சருக்கு ெரயில் நிலையம் முதல் நடு பல்க், பழைய பஸ்நிலையம், மேலகரம், குடியிருப்பு, குற்றாலம் அண்ணா சிலை, காசிமேஜர்புரம் உள்ளிட்ட 15 இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. தென்காசி தெற்கு மாவட்டம் முழுவதும் இருந்தும் 1,000 வாகனங்களில் சென்று விழாவில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் என்ன உதவிகள் வேண்டுமானாலும் நிர்வாகிகள் என்னை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் தென்காசி யூனியன் தலைவர் ஷேக் அப்துல்லா, பொதுக்குழு உறுப்பினர் சாமிதுரை, முன்னாள் அவைத் தலைவர் முத்துப்பாண்டி, பேரூர் செயலாளர்கள் சுடலை, முத்தையா, சங்கர் என்ற குட்டி, பண்டாரம், தென்காசி நகர் மன்ற துணைத் தலைவர் சுப்பையா, வக்கீல் வேலுச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் முகமது ஷெரீப் நன்றி கூறினார்.