தென்காசி அரசு மருத்துவமனையில் லிப்ட் பழுதானதால் பரபரப்பு - 4 பேர் பத்திரமாக மீட்பு

பழுதான லிப்டின் உள்ளே சிக்கியிருந்த 4 பேரை தீயணைப்புத்துறை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

Update: 2023-04-26 10:57 GMT

தென்காசி,

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளிகள், புறநோயளிகள் உள்பட சுமார் 2 ஆயிரம் பேர் தினமும் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இங்கு நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் தேவைக்காக லிப்ட் வசதி அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று மருத்துவமனையில் உள்ள லிப்ட் திடீரென பழுதானது. அந்த சமயத்தில் பழுதான லிப்டிற்குள் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த 2 நோயாளிகள் உள்பட 4 பேர் சிக்கியிருந்தனர். லிப்ட் பழுதானது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையத்து தென்காசி தீயணைப்புத்துறை வீரர்கள் விரைந்து வந்து, பழுதான லிப்டின் கதவை லாவகமாக உடைத்து அதன் உள்ளே சிக்கியிருந்த 4 பேரை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  

Tags:    

மேலும் செய்திகள்