நாமக்கல்லில்ஆஞ்சநேயர், நரசிம்மருக்கு சாற்றிய ஆடைகள் ரூ.18 ஆயிரத்துக்கு ஏலம்

Update: 2023-03-11 19:00 GMT

நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மசாமி கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மசாமிக்கு சாற்றப்பட்ட வேட்டிகள் மற்றும் நாமகிரி தாயாருக்கு அணிவிக்கப்பட்ட சேலைகள் அவ்வப்போது பொது ஏலத்தில் விடப்படும்.

அந்த வகையில் நேற்று ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் வஸ்திரங்கள் ஏலம் விடப்பட்டன. மொத்தமாக 54 வேட்டி மற்றும் சேலைகள் ரூ.18 ஆயிரத்து 100-க்கு விற்பனையானதாக கோவில் பணியாளர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்