பரமத்திவேலூரில் ரூ.17¾ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
பரமத்திவேலூரில் ரூ.17¾ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது.
பரமத்திவேலூர்:
பரமத்தி வேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 16 ஆயிரத்து 682 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.84.09-க்கும், குறைந்தபட்சமாக ரூ.67-க்கும், சராசரியாக ரூ.83.79-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.13 லட்சத்து ஆயிரத்து 613-க்கு வர்த்தகம் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்துக்கு 22 ஆயிரத்து 618 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.85.55-க்கும், குறைந்த பட்சமாக ரூ.64.99-க்கும், சராசரியாக ரூ.84.89-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.17 லட்சத்து 75 ஆயிரத்து 152-க்கு வர்த்தகம் நடைபெற்றது.