திருச்செங்கோட்டில் ரூ.2 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
திருச்செங்கோட்டில் ரூ.2 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகமான திருச்செங்கோட்டில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. இதில் முதல் தரம் கிலோ ரூ.76 முதல் ரூ.86 வரையிலும், 2-வது தரம் கிலோ ரூ.63 முதல் ரூ.70 வரை விற்பனை ஆனது. மொத்தம் 60 மூட்டை தேங்காய் பருப்பு ரூ.2 லட்சத்துக்கு ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்