ராசிபுரம்:
ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிப்பேட்டையில் ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று ஏலத்திற்கு மஞ்சள் மூட்டைகள் வராததால் மஞ்சள் ஏலம் நடைபெறாமல் ரத்து செய்யப்பட்டதாக சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.