திருச்செங்கோட்டில் ரூ.70 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

திருச்செங்கோட்டில் ரூ.70 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

Update: 2022-06-18 16:24 GMT

எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகமான திருச்செங்கோட்டில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இதில் விரலி ரக மஞ்சள் குவிண்டால் ரூ.7,109 முதல் ரூ.9,459 வரையிலும், கிழங்கு ரக மஞ்சள் குவிண்டால் ரூ.6,199 முதல் ரூ.6,910 வரையிலும், பனங்காளி ரக மஞ்சள் குவிண்டால் ரூ.10,022 முதல் ரூ.12,119 வரை விற்பனை ஆனது. மொத்தம் 1,500 மஞ்சள் மூட்டை ரூ.70 லட்சத்திற்கு ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்