ஊராட்சி செயலர் தற்காலிக பணி நீக்கம்
சீர்காழி அருகே உள்ள தில்லைவிடங்கன் ஊராட்சி செயலர் தற்காலிக பணி நீக்கம் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.;
சீர்காழி:
சீர்காழி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தில்லைவிடங்கன் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வந்தவர் பக்கிரிசாமி. இவர் ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்புரிந்துவருவதாக மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதிக்கு புகார் மனு அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின்படி, சீர்காழி வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) இளங்கோவன் உத்தரவின்படி பக்கிரிசாமி தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.