மேலகிருஷ்ணன்புதூர்,
சுசீந்திரம் அருகே உள்ள ராமபுரம் புதுகிராமம் காலனி பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 56), தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலையில் மொபட்டில் தேரூரில் இருந்து தேரேகால்புதூர் ரோட்டில் புது கிராமம் பலி கொண்டான் குளம் அருகே வந்து கொண்டு இருந்தார்.
அப்போது எதிரே வந்த டெம்போ மொபட் மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கனகராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இதுபற்றி சுசீந்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் டெம்போ டிரைவர் ராமபுரம் புது கிராமம் காலனி பகுதியை சேர்ந்த பொன்ராஜ் (52) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.