கொல்லங்கோடு:
கொல்லங்கோடு இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமையிலான போலீசார் நேற்று மாலை கிராத்தூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த டெம்போவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஆவணங்களின்றி செம்மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் டெம்போவை பறிமுதல் செய்து டிரைவரான கிராத்தூர் மாவுநின்றவிளையை சேர்ந்த சதீஷ் (வயது 40) என்பவரை கைது செய்தனர்.