குலசேகரம் அருகே பாறைக்கழிவு ஏற்றி வந்த டெம்போ சிறை பிடிப்பு

குலசேகரம் அருகே பாறைக்கழிவு ஏற்றி வந்த டெம்போவை சிறை பிடித்தனர்.

Update: 2023-03-19 18:45 GMT

குலசேகரம்:

சித்திரங்கோடு வலியாற்றுமுகம் சுருளோடு உள்ளிட்ட இடங்களில் ஏராளமான கல்குவாரிகள் உள்ளன. இந்த குவாரிகளில் இருந்து டெம்போக்களில் ஏற்றிச் செல்லப்படும் ஜல்லி, பாறை பொடிகள் மற்றும் பாறைக்கழிவு போன்றவை வலைத்துணியால் மூடப்பட்டு கொண்டு செல்லப்படுவதில்லை. அவ்வாறு வாகனங்களில் கொண்டு செல்லப்படும் போது சாலைகளில் சிதறி விழுகின்றன. அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்லும் பெண்கள், முதியோர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். நேற்று முன்தினம் குலசேகரம் அருகே செருப்பாலூர் மண்விளை பகுதியில் சென்ற ஒரு டெம்போவில் இருந்து பாறைக் கழிவுகள் சாலையில் சிதறி விழுந்தன. இதனால் சாலையில் சென்ற பிற வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. இதைகண்டு ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் டெம்போவை சிறை பிடித்தனர். இதையடுத்து டெம்போவில் இருந்து அதிகப்படியாக ஏற்றப்பட்ட பாறைக்கழிவுகள் அகற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து டெம்போவை பொதுமக்கள் விடுவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்