பிள்ளையார்பட்டி கோவில் நடை அடைப்பு
பிள்ளையார்பட்டி கோவில் நடை சாத்தப்படுகிறது.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அருகே உள்ளது பிள்ளையார்பட்டி. இங்கு பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்துவது வழக்கம்.
இந்நிலையில் இன்று(செவ்வாய்க்கிழமை) சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோவில் நடை காலை 6 மணி்க்கு திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. அதன் பின்னர் காலை 11.30 மணிக்கு உச்சிகால பூஜை நடைபெற்று மதியம் 12 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. மீண்டும் சந்திரகிரகணம் முடிந்தவுடன் இரவு 7.30 மணிக்கு நடை திறந்து வழக்கம் போல் பூஜைகள் நடைபெற உள்ளது. இந்த தகவலை கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.