களக்காடு:
களக்காடு நாடார் புதுத்தெரு முப்பிடாதி அம்மன் கோவிலில் நேற்று வருசாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி கோவில் முன் மண்டபத்தில் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு, கோபுர கலசங்களுக்கு புனிதநீர் அபிஷேகம் நடந்தது. அதன் பின் முப்பிடாதி அம்மன், பெருமாள், சுடலைமாட சுவாமி, முண்ட சாமி, பேச்சியம்மன் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு, மகா அபிஷேகங்களும், விஷேச அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.