பாதாள செம்பு முருகன் கோவிலில் வைகாசி திருவிழா
ரெட்டியார்சத்திரம் அருகே பாதாள செம்பு முருகன் கோவிலில் வைகாசி திருவிழா நடைபெற்றது.;
ரெட்டியார்சத்திரம் அருகே ராமலிங்கம்பட்டி போகர் மடலாயத்தில், பழமை வாய்ந்த பாதாள செம்பு முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், வைகாசி விசாக திருவிழா நடந்தது. இதையொட்டி நேற்று காலை பாதாள செம்பு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பாதாள செம்பு முருகனுக்கு, பக்தர்கள் கருங்காலி மாலைகள் சாத்தும் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, கருங்காலி மாலைகளை சாத்தி பாதாள செம்பு முருகனை பக்தர்கள் வழிபட்டனர்.
விழாவையொட்டி செங்கோலுடன், பாண்டிய மன்னனின் ராஜ தலைப்பாகை, மணிமகுடம் சூடி, வெண் முத்துக்கள், பட்டை தீட்டிய வெளிர் நிற கற்கள் மற்றும் மரகத பச்சை நிற கற்கள் பதித்த செவ்வாயின் ஆதிக்க நிறமான சிவப்பு வண்ண மகாராஜா அலங்காரத்தில் பாதாள செம்பு முருகன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைத்து பக்தர்களுக்கும், கோவில் ஆதீனம் சித்த அருள் சுவாமி அறிவாதீனம் மூலிைக திருநீறை பிரசாதமாக கொடுத்து ஆசி வழங்கினார்.
இன்று (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை மற்றும் 108 பக்தர்கள், 108 கருங்காலி மாலைகள் பாதாள செம்புமுருகனுக்கு சாற்றி வழிபாடு செய்யும் நிகழ்ச்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.