கோவில் - பள்ளியில் திருட்டு

கோவில் மற்றும் பள்ளியில் திருடி சென்றனர்.

Update: 2023-01-28 19:06 GMT

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை ஒன்றியம் ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள மேல மேட்டூர் கிராமத்தில் காவேரி அம்மன் உள்ளது. இந்த கோவிலை நிர்வாகி முனியசாமி (வயது 55) என்பவர் திறக்க சென்றார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வெண்கல குத்துவிளக்குகள், கோவில் உண்டியல் ஆகியவை திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் ஏழாயிரம் பண்ணை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சையது இப்ராஹிம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் அதே பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சத்துணவு கூடத்தில் வைக்கப்பட்டிருந்த உணவுப்பொருட்களும் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்