கோவில் தேரோட்டம்

மெலட்டூர் சித்தி புத்தி தட்சிணாமூர்த்தி விநாயகர் கோவில் தேரோட்டம் நடந்தது.

Update: 2023-09-17 19:57 GMT

பாபநாசம் தாலுகா மெலட்டூரில் சித்தி, புத்தி தட்சிணாமூர்த்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றது. அப்போது தட்சிணாமூர்த்தி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்து சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை எஸ்.குமார் மற்றும் கிராம மக்கள் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்