பெண்களிடம் கோவில் பூசாரி பண மோசடி

பெண்களிடம் கோவில் பூசாரி பண மோசடி செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Update: 2022-09-06 21:04 GMT

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஒரு கிராமத்தில் பிரசித்தி பெற்ற கோவில் உள்ளது. இந்த கோவிலில் மதுக்கூர் பகுதியை சேர்ந்த ஒருவர் பூசாரியாக இருந்தார். இவர் தங்குவதற்கு அக்கிராம மக்கள் ஒரு வீட்டையும் ஏற்பாடு செய்து கொடுத்தனர். இந்த வீட்டில் தங்கிய அவர் பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்லி வந்தார். அவ்வாறு வரும் பெண்களிடம் தங்கப்புதையல், பணப் புதையல் எடுத்து தருவதாக ஆசை வார்த்தை கூறி பல பெண்களிடம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்ததாக கூறப்படுகிறது. பூசாரி சொன்னபடி எதுவும் நடக்காததால் பணத்தை இழந்த பெண்கள் ஒரத்தநாடு போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்