கோவில் பூசாரி மின்சாரம் தாக்கி பலி
மதுரையில் மின்சாரம் தாக்கி கோவில் பூசாரி பலியானார்.;
மதுரை ஆனையூர் முத்து நகரை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 42). கோவில் பூசாரியான இவர் சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள மின்கம்பத்தை தொட்டார். அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால் எதிர்பாராதவிதமாக பாலமுருகன் கம்பத்தை தொட்ட உடன் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்த கூடல்புதூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.