தேய்பிறை அஷ்டமி வழிபாடு

பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது

Update: 2022-08-20 18:48 GMT

நீடாமங்கலம்

நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் தேய்பிறைஅஷ்டமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இதைமுன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. மேலும் காலபைரவருக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு வடைமாலை அணிவிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதைப்போல நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.திருமக்கோட்டை ஞானபுரீஸ்வரர் கோவிலில் உள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது. இதையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் கால பைரவருக்கு வடை மாலை அணிவிக்கப்பட்டது. மேலும் சிவபெருமானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்